கோவையில் வருமான வரி சோதனை

Home

shadow


கோவையில் உள்ள பிரபல நிதி நிறுவனம் மற்றும் வைர வியாபார அலுவலகத்தில் வருமான வரித் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த விமல், பெரியகடை வீதி பகுதியில் ஸ்ரீநிதி புல்லியன் என்ற பெயரில் வைர வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை 10 மணி முதல் ஸ்ரீநிதி புல்லியன் அலுவலகத்தில் 5 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கொண்ட குழு திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர் உரிய முறையில் வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வந்ததாகவும் அதன் காரணமாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நிதி நிறுவனமான கொசமற்றம் பைனான்ஸ் நிறுவனத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.  தலா 3 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு கோவையில் அந்நிறுவன கிளைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக பல முறை நோட்டீஸ் அனுப்பியும் முறையான பதில் அளிக்காமலும் வரி செலுத்தாமலும் இருந்ததாலேயே தற்போது சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான செய்திகள் :