பங்கு சந்தையின்
இன்றைய தொடக்க நேரத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 43 காசுகள் சரிந்து 73 ரூபாய் 77 காசுகளாக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக கச்சா எண்ணெயின் விலை கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது.
பங்குச் சந்தை நேற்று நிறைவடைந்த போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 34 காசுகளாக இருந்தது.
இந்நிலையில், இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 43 காசுகள் சரிவடைந்து 73 ரூபாய் 77 காசுகளாக இருந்தது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக இந்திய பங்குச்
சந்தையும் இன்று சரிவுடனே ஆரம்பித்தது.