சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

Home

shadow

                             சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு மிகக் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ரூபாய் மதிப்பு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறது. 


இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின்போது 73.24 என்ற மிக அதிகபட்ச சரிவுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு, சிறிது நேரத்தில் மேலும் சரிந்து 73.34 என்ற நிலையை எட்டியது. 


முன்னதாக அக்டோபர் 1-ஆம் தேதி வர்த்தக நேர முடிவின்போது ரூபாய் மதிப்பு 72.91 ஆக இருந்தது. ரூபாய் மதிப்பு மிகக் கடுமையாக சரிந்ததன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் சரிவுடன் தொடங்கி உள்ளன. 



சென்செக்ஸ் 200 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது. ரூபாயின் மதிப்பு 73 என்ற அளவை எட்டி உள்ளது இதுவே முதன் முறையாகும்.

இது தொடர்பான செய்திகள் :