சிங்கப்பூர் பட்ஜெட் அறிவிப்பு

Home

shadow

சிங்கப்பூர் அரசு பட்ஜெட்டில் உள்ள உபரி வருவாயை தனது குடிமக்களுக்கு, போனசாக வழங்கவுள்ளது. 21 வயது நிரம்பிய குடிமகன்கள் இதற்கு தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ரூபாயின் மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில், அந்நாட்டு நிதியமைச்சர், ஹெங் ஸ்வீ கீட் அண்மையில், பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில்,  அரசுக்கு சுமார் 7.6 அமெரிக்க டாலர் ரூபாய் வருவாய் உபரியாக இருப்பதாக தெரிவித்தார். உபரி பட்ஜெட் என்பது செலவுகளை விட வருவாய் அதிகமானதாகும். இதனால், சிங்கப்பூர் குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். அதன்படி, 21 வயது நிரம்பிய குடிமக்கள், இந்த போனஸை பெற தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, குடிமக்களின் வருவாய்க்கு ஏற்ப இந்திய மதிப்பில் 4 ஆயிரம் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். இதற்காக, 533 அமெரிக்க டாலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சுமார் 27 லட்சம் பேர் இதனால் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :