சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் - மத்திய நிதியமைச்சர்

Home

shadow


    சரக்கு-சேவை வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்தால், மேலும் சில பொருட்களுக்கு வரி குறைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பேசியபோது, பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை, ஜிஎஸ்டி கவுன்சில் படிப்படியாக குறைத்து வருவதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 384 பொருள்களுக்கும், 68 சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், 186 பொருள்கள், 99 சேவைகளுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து முற்றிலுமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், வரி மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரிக்கும்போது, மேலும் பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள் :