சீனா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு

Home

shadow

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் பலமுறை சீனா வட கொரியாயாவுக்கு எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக குற்றம்சாடியுள்ளார்.

 

          அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாம் பீச்-சில் உள்ள தன்னுடைய கோல்ப் மைதானத்தில் இருந்து இந்த ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். சீனா கப்பல்கள் வடகொரியா கப்பல்களுக்கு எண்ணெய் பரிமாற்றுவதை தென் கொரியா செயற்கைக்கோள்கள் படம் பிடித்ததாக வெளியான தகவல்களை அடுத்து ட்ரம்ப் சீனாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

         சீனாவின் இந்த நடவடிக்கை தொடருமேயானால் , வட கொரியா விவகாரத்துக்கு அமைதியான முறையில் தீர்வு காண வாய்ப்பு இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களில் 9௦ சதவீதத்தை குறைக்க ஐநா பொது சபை சென்ற வாரம் தீர்மானம் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது. 
 

இது தொடர்பான செய்திகள் :