சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிகை இறக்குமதி தடுப்பு வரி விதித்துள்ள மத்திய வர்த்தக அமைச்சகம்

Home

shadow

                    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 99 பொருட்கள் மீது மிக இறக்குமதி தடுப்பு வரியை மத்திய வர்த்தக அமைச்சகம் விதித்துள்ளது.


இது தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் சி.ஆர். செளதரி, "சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயனங்கள், பெட்ரோகெமிக்கல்ஸ், இயந்திர பாகங்கள், மருந்துகள், ரப்பர், இரும்புப் பொருள்கள், நூல், நூலிழை உள்பட 99 பொருள்களுக்கு மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும்,இந்த வரி விதிப்பானது கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனவும் தெரிவித்தார் தனது பொருள்களை சீனா மலிவான விலையில் அபரிமிதமாக இறக்குமதி செய்து வருவதால், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதாகப் புகார் எழுந்ததை தொடர்ந்து, உலக வர்த்தக அமைப்பு விதிகளின் அடிப்படையில், இந்த வரியை மத்திய வர்த்தக அமைச்சகம் விதித்துள்ளது என்றும், சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில், ஏற்றுமதியை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :