ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிஇழப்பு தொகையை மத்திய அரசு திரும்ப தரவேண்டும் - தமிழக அரசு

Home

shadow

                   ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டத்தில் ஜிஎஸ்டி வரிஇழப்பு தொகை 2 ஆயிரத்து 775 கோடி ரூபாயை மத்திய அரசு திரும்ப தரவேண்டும் என தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்த கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்று தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றுள்ளார். டெல்லி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், செப்டம்பர் 2018 வரை ஏற்பட்ட ஜி.எஸ்.டி. வரி இழப்பு தொகை 2 ஆயிரத்து 775 கோடி ரூபாயை மத்திய அரசு திரும்பத்தர வேண்டும் என்றும் ஆடம்பர பொருட்கள் மீது வரி குறைப்பை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவி்த்தார். மேலும் வணிகச் சின்னம் இடப்பட்ட உணவு தானியங்கள் உள்ளிட்டவை மீதான வரிகளை குறைக்கவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :