ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவிப்பு

Home

shadow

              டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தொலைக்காட்சிப் பெட்டி, சினிமா டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான வரியைக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது..


கடந்த தில தினங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, 99 சதவீத பொருள்களை 18 சதவீதத்துக்கும் குறைவான ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று கூறியிருந்தார்.ட் இந்நிலையில், ஜிஎஸ்டி் கவுன்சிலின் 31-ஆவது கூட்டம், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 23 பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அவர் அறிவித்தார். வரி குறைக்கப்படும் 23 பொருள்களில், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள், பவர் பேங்க், மின்னணு கேமரா, வீடியோ கேமரா, வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட 7 பொருள்களின் ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 100  ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது .100- ரூபாய்க்கும் அதிகமான கட்டணத்துக்கான  ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களின் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மார்பிள் கற்கள், கைத்தடி, சிமெண்ட் கற்கள் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், டின்னில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் ஆகியவற்றுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், பிரதமரின் வங்கிக் கணக்கு திட்டம் மூலம் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்குகளுக்கு வரி விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண் ஜேட்லி, 23 பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதால், ஆண்டொன்றுக்கு 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :