ஜிஎஸ்டி வரி வசூல் 13 லட்சம் கோடியாக ரூபாயாக அதிகரிக்கும்

Home

shadow

நிகழாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியான, ஜிஎஸ்டி வரி வசூல் 13 லட்சம் கோடியாக ரூபாயாக அதிகரிக்கும் என மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

 

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, ஜூலை 1-ஆம் தேதியை ஜிஎஸ்டி தினமாக மத்திய அரசு நேற்று கொண்டாடியது. இதனையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்ல், மத்திய நிதியமைச்சர், பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட, 2017-2018 முதலாவது நிதியாண்டில் மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் வசூலானதாகவும், இதில், மாத சராசரி ஜிஎஸ்டி வரி வசூல் 89 ஆயிரத்து 885 கோடி ரூபாய் எனவும் தெரிவித்தார். நிகழாண்டில், கடந்த ஏப்ரல் மாதத்தில் 1 லட்சத்து மூவாயிரம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி வசூலாகியது சாதனை அளவாகும் எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து மே மாதம் 94 ஆயிரத்து 16 கோடி ரூபாயும், ஜூன் மாதம்  95 ஆயிரத்து 610 கோடியும் ஜிஎஸ்டி வரியாக வசூலானதாக கூறினார். இது படிப்படியாக உயரும் எனவும், ஒட்டுமொத்தமாக இந்த நிதியாண்டின் இறுதியில், ஜிஎஸ்டி வரி வசூல் 13 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நிதியமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :