ஜி.எஸ்.டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தில் புதிய வரி விகிதங்களின் அமலாக்கம் குறித்து ஆலோசனை

Home

shadow

          மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தில் புதிய வரி விகிதங்களின் அமலாக்கம் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

 


மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 34வது கூட்டம், இன்று நடைபெற உள்ளது. காணொலி காட்சி மூலம் நடத்தப்படும். இக்கூட்டத்தில், மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், கட்டுமான பணியில் உள்ள வீடுகளுக்கு, ஜி.எஸ்.டி., 5 சதவீதம்; குறைந்த விலை வீடுகளுக்கு, 1 சதவீதம் என, குறைத்து நிர்ணயிக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த புதிய வரி விகிதங்கள், ஏப்ரல், 1 முதல் அமலுக்கு வர உள்ளன. இதன் அமலாக்கம் தொடர்பான அம்சங்கள், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. சிமென்ட் வரி குறைப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும் என, தெரிகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் புதிய முடிவுகளை எடுக்கவோ அல்லது அறிவிக்கவோ வாய்ப்பில்லை.

 

இது தொடர்பான செய்திகள் :