டெல்லியில் உலக வங்கி அறிக்கை

Home

shadow


பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி பாதிப்பிலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டுள்ளதாகவும்  2018-ஆம் ஆண்டு இந்தியா 7 புள்ளி 3 சதவீத பொருளாதார வளர்ச்சி பெறும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.

தெற்கு ஆசிய பொருளாதாரம் குறித்து உலக வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில்இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட உயர்மதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் திட்டம் மற்றும் ஜிஎஸ்டி அமல் ஆகியவை, தொடக்கத்தில்  பொருளாதாரத்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியதுடன், ஏழைகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியது என குறிப்பிட்டுள்ளது. அதே சமயம் தற்போதுஇந்தியப் பொருளாதாரம் அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் 2017-இ ல் 6 புள்ளி 7 சதவீத வளர்ச்சியுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், 2018-ஆம் ஆண்டு 7 புள்ளி 3 சதவீதமாக உயரும் எனவும் தெரிவித்துள்ளது.  மேலும், 2019 மற்றும் 2020-இல் இந்தியப் பொருளாதாரம் 7 புள்ளி 5 சதவீத வளர்ச்சி பெறும் எனவும், முதலீடு மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க, இந்தியா இன்னும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :