டெல்லியில் ஜன்தன் கணக்கு

Home

shadow


பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வைப்புத் தொகையாக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்கள் அனைவரும் வங்கி சேவையை பயன்படுத்தும் விதமாக 2014-ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட வங்கி கணக்குகளில் சேமிக்கப்பட்ட பணத்தின் அளவு 80 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் இந்த வங்கி கணக்குகளில் சேமிக்கப்படும் தொகையின் அளவு அதிகரித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 26 கோடியே 50 லட்சமாக இருந்த ஜன்தன் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை தற்போது 31 கோடியே 45 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும், இந்த திட்டத்தின் மூலம் பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையேயான வங்கி கணக்கு வித்தியாச விகிதமானது 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர், ஜன்தன் திட்டம், மக்கள் இடையே மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :