டெல்லியில் நிதிப்பற்றாக்குறை

Home

shadow


ஜி.எஸ்.டி  வருவாய் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட நிதி பற்றாக்குறை குறையும் என மத்திய நிதியமைச்சர்  பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் பியூஷ்  கோயல், நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறையை 3 புள்ளி 3 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார்.  ஜி.எஸ்.டி-யால் வரி வருவாய் அதிகரித்துள்ளதாகவும், இதன் மூலம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் அளவு நிதிப் பற்றாக்குறையை குறைக்க முடியும் என்ற நம்பிக்கை உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார். நடப்பு நிதியாண்டில்  ஜிஎஸ்டி மூலம் 13 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல்- மே மாத காலகட்டத்தில் நிதிப்பற்றாக்குறை 3 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :