தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டம் - அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான்

Home

shadow

 

நாட்டில் தங்க நகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவதை விரைவில் கட்டாயமாக்குவது தொடர்பாக மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.


ஹால்மார்க் என்பது தங்கத்தின் கலப்படமில்லா தூய்மைத் தன்மையை குறிப்பதற்காக வழங்கப்படும் முத்திரையாகும். நுகர்வோர் அமைச்சகத்தின் கீழ் வரும் இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பானது பி.ஐ.எஸ் முத்திரையை வழங்கும் அதிகார அமைப்பாக உள்ளது. தற்போதைய நிலையில் தங்கநகை விற்பனைக்கு ஹால்மார்க் முத்திரை பெறுவது, விற்பனையாளர்களின் விருப்பம் சார்ந்ததாக இருக்கிறது. இந்திய தர கட்டுப்பாட்டு அமைப்பு உலகளாவிய தரக் கட்டுப்பாடு மற்றும் 4 வது தொழிற்புரட்சி என்ற தலைப்பிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் பேசுகையில், தங்க நகைகளுக்கான ஹால்மார்க் தர நிர்ணயத்தை இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பானது 14 காரட், 18 காரட், 22 காரட் என 3 நிலைகளாக பிரித்துள்ளது என தெரிவித்தார். மேலும் நாட்டில் தங்க நகை விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை பெறுவது விரைவில் கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவித்தார். நுகர்வோரின் நலன் கருதி இந்த நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்வதில் இந்தியா பின்தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் தர நிர்ணயத்துக்கான பணிகளை விரைவுபடுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளதாவும் கூறினார்

இது தொடர்பான செய்திகள் :