தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு

Home

shadow

                    தங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 13 அன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 29 ஆயிரத்தை தாண்டியது. பின் மீண்டும் சற்று குறைந்தது. இந்நிலையில் இன்று மீண்டும விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கம், சவரன் ஒன்றுக்கு 192 ரூபாய் அதிகரித்து 28 ஆயிரத்து 856 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம், 3 ஆயிரத்து 607 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் ஒரு கிராம் சொக்கத்தங்கம் மூவாயிரத்து 764 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு  47 ரூபாய் 90 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :