தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

Home

shadow

 

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. நிதி அமைச்சரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய் உள்ளார்.

2018-19-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 10.30 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதன் பின்னர் கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவெடுக்கும். அதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதமும், விவாதங்களுக்கு நிதியமைச்சர் பதிலுரையும் இடம்பெறும். இந்த நிலையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், பல புதிய திட்டங்கள் இடம்பெறக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில், ஏழாவது ஊதியக் குழு அமல், ஜி.எஸ்.டி. வரி வருவாய் குறைவு ஆகியவற்றால் தமிழக அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளதால், பட்ஜெட்டில் அதிகளவு வருவாய் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஈடுகட்ட புதிய வரிகள் அல்லது வரிகள் உயர்வு இருக்கும் என்று தெரிகிறது. அத்துடன் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பல புதிய சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்தக் கூட்டத் தொடரில் குரங்கணி காட்டுத் தீ சம்பவம், ஐ.டி., பெண் ஊழியர் லாவண்யா மீதான தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

                இதற்கிடையே பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து காவிரி விவகாரம் தொடர்பாக சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனே அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :