திருமழிசை துணை நகர திட்டத்திற்காக நிலம் கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு விவசாயிகள் சேற்றில் இறங்கி போராட்டம்

Home

shadow

                    பூந்தமல்லியில் திருமழிசை துணை நகர திட்டத்திற்காக நிலம் கையகபடுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சேற்றில் இறங்கி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு கிராமத்தில்  விவசாயம் சார்ந்த விளை நிலம் உள்ளது.இந்த விளை நிலத்தில் தொடர்ந்து பல தலைமுறைகளாக மூன்று போகம் நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.தற்போதும் மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு ள்ளது.இந்த விளை நிலத்தை வீட்டு வசதி வாரியம் திருமழிசை துணை நகரம் அமைக்கும் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதற்க்கு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்  நிலத்தை கையகபடுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.இதனால் அத்திரமடைந்த 50 கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து சேற்றில் இறங்கி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான செய்திகள் :