துபாய் லாட்டரியில் இந்தியருக்குப் 10 லட்சம் டாலர் பரிசு

Home

shadow


துபாய் லாட்டரிச் சீட்டில், குவைத்தில் வாழும் இந்தியர் ஒருவருக்கு, 10 லட்சம் டாலர் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. மேலும் ஒருவருக்கு பிஎம்டபுள்யூ பைக் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வாழும் சந்தீப் மேனன் என்ற இந்தியருக்கு, துபாயின் ரபேல் டூயூட்டி ஃபிரீ லாட்டரியில் 10 லட்சம் டாலர் பணம் கிடைத்துள்ளது. மேலும் துபாயைச் சேர்ந்த சாந்தி போஸ் என்பவருக்கு பிஎம்டபுள்யூ மோட்டார் பைக் கிடைத்துள்ளது. பணம் வென்ற சந்தீப் மேனன் தனது வாழ்நாளில் இதைவிட மகிழ்ச்சியான தருணம் ஏதும் இல்லை என்றும் துபாயின் ரபேல் டூயூட்டி பிரீ லாட்டரிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். ரபேல் டூயூட்டி ஃபிரீ  லாட்டரி தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 132 இந்தியர்களுக்கு பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :