தெற்கு ரயில்வே மூவாயிரத்து 351 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.

Home

shadow

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுதெற்கு ரயில்வேயில் பயணிகள் ரயில்களின் தேவை அதிகரித்து வருவதாகவும், கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 53 கோடியே 70 லட்சம் பேர், ரயில் பயணம் மேற்கொண்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் மூவாயிரத்து 351 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 4 விழுக்காடு அதிகம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்சென்னை கோட்டத்தில் மட்டும், ஆயிரத்து 307 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது சென்ற ஆண்டை விட 5 புள்ளி 4 விழுக்காடு அதிகம் எனவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :