நாடாளுமன்றம் - மத்திய அமைச்சர் அனந்த குமார்

Home

shadow


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், அவையில் எந்த பணிகளும் நடைபெறாததால், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் 23 நாட்களுக்கான ஊதியத்தை பெறமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடர் தொடங்கிய நாள் முதல், காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பஞ்சாப் நேஷ்னல் வங்கி கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால்அவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது. அமளியை காரணம் காட்டி, மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் அமளி காரணமாக எந்த வேலையும் நடைபெறாததால், தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் 23 நாட்களுக்கான ஊதியத்தை பெறமாட்டார்கள் என்று மத்திய அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மக்கள் பணியாற்றுவதற்காகத்தான் சம்பளம் வழங்கப்படுவதாகவும், ஆனால், எந்த பணியும் நடைபெறாததால் அதற்கான சம்பளத்தை பெறப்போவதில்லை என்று கூறியுள்ளார். எதிர்கட்சிகள் ஜனநாயகமற்ற முறையில் நாடாளுமன்றத்தை முடக்கி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான செய்திகள் :