நாடு முழுவதும் வருகிற 26 ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவிப்பு

Home

shadow

 

3 வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26 ஆம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது.


தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளான மும்பையை மையமாக கொண்டு இயங்கும் தேனா வங்கி, பெங்களூருவை மையமாக கொண்டு செயல்படும் விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் உருவாக்கப்படும் புதிய வங்கி குஜராத்தை மையமாக கொண்டு இயங்குவதுடன், பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எச்.டி.எப்.சி. வங்கி ஆகியவற்றுக்கு பிறகு 3-வது பெரிய வங்கியாக இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த  வங்கிகள் இணைப்புக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி வருகிற 26 ஆம் தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் நேற்று அறிவித்து உள்ளது. மும்பையில் நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த அமைப்பில் 9 தொழிற்சங்கங்கள் அங்கம் வகித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :