நாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி

Home

shadow

                    நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி நடப்பு நிதியாண்டின் கடைசி நாள் ஆகும். அதனால் இதையொட்டி அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது வரவு செலவு கணக்கை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதனால், அன்று விடுமுறை விடப்பட்டால், அரசுக்கும், நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், நாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்நிலையில்நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பொதுத்துறை, தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் செயல்படாது. அதேநேரத்தில், இணையதளம் மற்றும் தொலைபேசி கணக்குகள் வாயிலாக பணப்பரிவர்த்தனை மேற்கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான செய்திகள் :