நீதிபதிகள் சொத்து விவரம்

Home

shadow


உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 23 பேரில் 12 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் சொத்து விவரங்களை வெளியிடக் கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த 2007-ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் அப்போது அந்த மனுவுக்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனைத்  தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு நீதிபதிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் எனவும், இது குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 12 பேர் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது 23 பேர் நீதிபதிகளாக உள்ளனர். இதில் தலைமை நீதிபதி உட்பட 12 நீதிபதிகள் மட்டுமே தங்கள் சொத்து விவரங்களை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பான செய்திகள் :