நீரவ் மோடியின் இன்டர்போல்

Home

shadow


இந்தியாவிடம் நீரவ் மோடி குறித்து விபரங்களை, சர்வதேச போலீசான, இன்டர்போல் கோரியுள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற நீரவ் மோடி, அதனை திருப்பி செலுத்தாமல் குடும்பத்துடன் வெளிநாடு தப்பி சென்றார். இதையடுத்து நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கிருப்பது அண்மையில் தெரியவந்தது. இதைதொடர்ந்து இந்தியாவின் கோரிக்கையை ஏற்று அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நீரவ் மோடி குறித்து விபரங்களை, சர்வதேச போலீசான, இன்டர்போல் இந்தியாவிடம் கோரியுள்ளது. இதையடுத்து அவர்களுக்கான தகவல்களை அளிக்கும் பணியில், சி.பி.. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நீரவ் மோடி விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இது தொடர்பான செய்திகள் :