நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

Home

shadow


    வங்கி கடன் மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள வைர வியாபாரி நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று மோசடி செய்த குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியா கொண்டு வர அமலாக்கத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றம் நீரவ் மோடி வரும் 29-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள  வைர வியாபாரி நீரவ் மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச காவல்துறையான இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு நீரவ் மோடி பயணம் மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில், தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்திருப்பது அவருக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கையை மேலும் கடுமையாக்கியுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :