நீராவ் மோடி - சீனா

Home

shadow


இந்திய அரசின் சார்பில், முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நீரவ் மோடியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த நீரவ் மோடி வெளிநாடு தப்பி சென்றார். தற்போது அவர் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து, நீரவ் மோடியை கைது செய்ய வலியுறுத்தி, ஹாங்காங் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கெங் சுனாக், இந்திய அரசின் சார்பில், முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டால், சட்ட விதிகளுக்கு உட்பட்டு, நீரவ் மோடியை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். இருநாட்டு ஒப்பந்தத்தின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்

இது தொடர்பான செய்திகள் :