பட்ஜெடில் 3000 புதிய பேருந்துகள்

Home

shadow


தமிழக பட்ஜெட்டில் நெடுஞ்சாலை துறைக்கு 11 ஆயிரத்து 73 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலப் போக்குவரத்து கழகங்களுக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-2019 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அதில், 600 கோடி ரூபாய் பங்கு மூலதனம் மூலம் மாநிலப் போக்குவரத்துக் கழகத்துக்கு 3000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் எனத் தெரிவித்த நிதியமைச்சர், 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள 4,593 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் நெடுஞ்சாலை துறைக்கு 11 ஆயிரத்து 73 கோடி ரூபாயும், வருவாய் துறைக்கு 6 ஆயிரத்து 44 கோடி ரூபாயும், குடிமராமத்து பணிகளுக்கு 300 கோடி ரூபாயும், காவல்துறைக்கு ரூ.7877 கோடி ரூபாயும், ரயில்வே பணிகள் திட்டத்துக்கு 514 கோடி ரூபாயும், வறுமை ஒழிப்புக்கு 520  கோடி ரூபாயும், மகளிர் திருமண உதவி திட்டத்துக்கு 724 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இவை தவிர, உள்ளாட்சிதுறைக்கு 17 ஆயிரத்து 869 கோடி ரூபாயும், குடிநீர் திட்டங்களுக்கு ஆயிரத்து 853 கோடி ரூபாயும், பழங்குடியினர் நலனுக்கு 334 கோடி ரூபாயும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஆயிரத்து 336 கோடி ரூபாயும், இலவச சைக்கிள் திட்டத்துக்கு 71 கோடி ரூபாயும், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்க 758 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, கோவை அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 345 எம்.பி.பி.எஸ். இடங்கள் ஒதுக்கப்படும் எனவும் சத்துணவு திட்டத்துக்கு  ஆயிரத்து 747 கோடி ரூபாயும், தூய்மை இந்தியா திட்டத்துக்கு ஆயிரத்து 74 கோடி ரூபாயும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற 20 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :