பட்ஜெட் அறிவிப்புகள் அமல்

Home

shadow


     புதிய நிதி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

நாடாளுமன்றத்தில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கலானது. இதில்,

பங்குகள் விற்பனையில் மூலதன வருவாய் வரி வசூல், கல்வி வரி உயர்வு உள்ளிட்ட பல அம்சங்களை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார். அதன்படி இன்று புதிய நிதி ஆண்டு தொடங்கி உள்ளதால் பட்ஜெட் அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தன. இதன்படி  பேருந்து டயர்கள், இறக்குமதி செல்போன்கள், டி.வி.க்கள், வாசனை திரவியங்கள், பழச்சாறுகள், சமையல் எண்ணெய், தங்கம் உள்ளிட்டவைகளின் விலைகள் உயர்ந்துள்ளன. முந்திரி பருப்பு,

சூரியசக்தி பேனல்கள் உள்ளிட்டவைகளின் விலைகள் குறைந்துள்ளன. முக்கியமாக, மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்திற்குஇ-வே பில் என்னும் மின்னணு ரசீது நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது.

வருமான வரி செலுத்துகிறவர்களுக்கான கல்வி வரி 3 சதவிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதும் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. 

இது தொடர்பான செய்திகள் :