பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது - ரிசர்வ் வங்கி

Home

shadow

                             பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் பண புழக்கம் 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, 2016 ஆண்டு நவம்பர் மாதம்  8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிய, 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. செல்லாததாக அறிவிக்கப்பட்ட நோட்டுகளை வங்கிகளில் திருப்பி செலுத்த அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றை வெளிட்ட்து. அதில், கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதியில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதற்கு முன்பு பண பழக்கம் 17 லட்சத்தி 97 கோடி ரூபாயாக இருந்த்து. தற்போது புதிதாக 50 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி வரையிலான இரண்டு ஆண்டுகளில் நாட்டில் பண புழக்கம் 20 லட்சத்து 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான செய்திகள் :