பிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்கிய அம்பானி

Home

shadow

            பிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்கிய அம்பானி 

           இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி பிரிட்டனின் பழம்பெரும் பொம்மை நிறுவமான ஹாம்லேஸை வாங்கியுள்ளார். வாங்கப்பட்ட தொகை இதுவரை வெளியிடப்படவில்லை.

            ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை 2015ம் ஆண்டு வாங்கிய சீனாவின் சி பேனர் இன்டர்நேஷனல் நிறுவனத்தோடு அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பிராண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

           உலகிலேயே மிகவும் பழமையான பொம்மை சில்லறை விற்பனை நிறுவனம்  ஹாம்லேஸ். 1760ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனத்திற்கு  18 நாடுகளில் மொத்தம் 167 கிளைகள் உள்ளன.

           இந்தியாவின் 29 நகரங்களில் 88 ஹாம்லேஸ் பொம்மை கடைகளை ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் ஏற்கெனவே நடத்தி வருகிறது.

       "பழம்பெரும் ஹாம்லேஸ் பிராண்ட் முழுவதையும் வாங்க வேண்டுமென நீண்ட நாட்களாக இருந்து வந்த கனவு இப்போது நனவாகியுள்து," என்று ரிலையன்ஸ் பிராண்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி தர்ஷன் மேத்தா அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பான செய்திகள் :