பி.என்.பி. விளக்கம்

Home

shadow

  

     வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளதாக பஞ்சாப் நேஷ்னல் வங்கி விளக்கம் அளித்துள்ளது. வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 

வைர வியாபாரி நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கிக் கிளையில் 13ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்தது அண்மையில் தெரியவந்தது. வங்கியில் பணிபுரிந்த அலுவலர்களின் உதவியுடன் போலி உத்தரவாதக் கடிதங்களைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் நீரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மோசடியால் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் செயல்பாடுகள் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி, வாடிக்கையாளர்களின் பணம் வங்கியில் பத்திரமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானலும் வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை எடுத்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. வங்கியின் வரவு-செலவு அறிக்கையின்படி, வங்கியில் 11 லட்சம் கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் கூறியுள்ளது.  

இது தொடர்பான செய்திகள் :