புதிய வரலாறு - இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல் முறையாக 38 ஆயிரம் புள்ளிகளைக் கடந்தது

Home

shadow

 

இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் சென்செக்ஸ் முதல் முறையாக 38 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து, புதிய வரலாறு படைத்துள்ளது.

வங்கிகள், மின்துறை, பொதுத்துறை பங்குகளை உள்நாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கியதாலும், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்ததாலும் இந்திய பங்குச்சந்தைகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. நேற்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போதுசென்செக்ஸ் 162.56 புள்ளிகள் உயர்ந்து 38 ஆயிரத்து 50 புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டி உள்ளது. இதற்கு முன்னர் புதன்கிழமை சென்செக்ஸ் எட்டிய 37 ஆயிரத்து 931  புள்ளிகளே புதிய உச்சமாக பார்க்கப்பட்டது. இதே போன்று நிப்டியும் 45.20 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 495.20 புள்ளிகளில் வர்த்தகமாகியது. வங்கிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, பொதுத்துறை, கட்டுமானம், ஐடி, உலோகம், மின்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் பங்குகளும் உயர்வுடனேயே காணப்படுகின்றன. அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தக பதற்ற நிலை காணப்பட்டபோதிலும் ஆசிய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. 

இது தொடர்பான செய்திகள் :