பூட்டானின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும்

Home

shadow

 

பூட்டானின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் செரிங் டோப்கே, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது பேசிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியா - பூட்டான் இடையேயான நட்புறவு மிகவும் தனித்துவம் வாய்ந்தது என தெரிவித்தார். கடந்த ஆண்டுகளில் பூட்டான் சிறப்பான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இந்தியா - பூட்டான் இடையேயான உறவு பலப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். தனது 11-வது ஐந்தாண்டு திட்டத்தை பூட்டான் அரசு மிகச் சிறப்பாக செயல்படுத்தி இருப்பதாக தெரிவித்த குடியரசு தலைவர், பூட்டானின் 12-வது ஐந்தாண்டு திட்டத்தில், அந்நாட்டின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :