பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

Home

shadow


      சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகளாகவும் அதிகரித்து ஒரு லிட்டர் 83 ரூபாய் 13 காசாகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 76 ரூபாய் 17 காசுகளாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.


      சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. 


    கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது. பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


   இந்நிலையில் கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்துள்ளது. 


   இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.


     சென்னையில் பெட்ரோல் விலை 51 காசுகளாகவும் அதிகரித்து ஒரு லிட்டர் 83 ரூபாய் 13 காசாகவும், டீசல் விலை 56 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் 76 ரூபாய் 17 காசுகளாகவும்  விற்பனை செய்யப்படுகிறது.

இது தொடர்பான செய்திகள் :