பொது மக்களின் புழக்கத்துக்கு தேவையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன - சுபாஷ் சந்திர கார்க்

Home

shadow

                    பொது மக்களின் புழக்கத்துக்கு தேவையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.


2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்கும் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள, பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க் எதிர்கால தேவையை மதிப்பீடு செய்து அதற்கேற்றபடி நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள் திட்டமிட்டது போல் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் 2 ஆயிரம் நோட்டுகளைப் பொருத்தவரை புழக்கத்தில் தேவைக்கு அதிகமாகவே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் புழக்கத்தில் உள்ள மொத்த நோட்டுகளில் 35 சதவீதம் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பு நோட்டுகளே என குறிப்பிட்ட அவர் இந்த நிலையில், புழக்கத்துக்கு மேலும் தேவைப்படும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் போதுமான அளவில் தற்போது கையிருப்பில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சூழலில் 2 ஆயிரம் ரூபாய் நேட்டுகளை அச்சிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று தனது பதில் கூறியுள்ளார்.

இது தொடர்பான செய்திகள் :