பொதுத் துறை வங்கிகள் கடன் மோசடியாளர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மீட்பு - ரிசர்வ் வங்கி

Home

shadow

            கடன் பெற்றுவிட்டு திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தவர்களிடம் இருந்து பொதுத் துறை வங்கிகள் இதுவரை 40 ஆயிரத்து 400 கோடி ரூபாயை மீட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


விஜய் மல்லையா
, நீரவ் மோடி போன்ற பல்வேறு தொழிலதிபர்களின் கடன் மோசடியால் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து, இந்த ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்தன. இதையடுத்து, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், பொதுத் துறை வங்கிகள் கடன் மோசடியாளர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மீட்டுள்ளதாகக் கிடைத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. திவால் சட்டம், லோக் அதாலத், கடன் மீட்புத் தீர்ப்பாயம், மற்றும் கடன் மோசடியாளர்களின் சொத்துகளை ஏலம் வீட்டு பணத்தை மீட்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த அளவிலான தொகை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவலில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டில் கடன் மோசடியாளர்களிடம் இருந்து 40 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கோடி பொதுத் துறை வங்கிகள் மீட்டுள்ளன என்றும் முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 38 ஆயிரத்து 500 கோடி மீட்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 40 ஆயிரத்து 400 கோடி ரூபாயில் திவால் சட்டத்தின் மூலம் 4 ஆயிரத்து 900 கோடியும், மோசடியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலம் விட்டதில் 26 ஆயிரத்து 500 கோடியும் கிடைத்துள்ளன. அதே நேரத்தில் லோக் அதாலத், கடன் மீட்புத் தீர்ப்பாயத்தின் மூலம் கடன் தொகை மீட்கப்படுவது குறைந்துவிட்டது. திவால் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, அதன் மூலம் மேற்கொள்ளப்படும் கடன் மீட்புத் தொகை அதிகரித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :