பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் - தர்மேந்திர பிரதான்

Home

shadow

 

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை நிர்ணயத்தில் மத்திய அரசு தலையிடாது எனவும், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் எனவும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.  மத்திய அரசு விலைக் குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன எனவும், இந்த நடைமுறை தொடரும் என்பதால் இதில் மத்திய அரசின் தலையீடு எதுவும் இருக்காது எனவும் தெரிவித்தார். பெட்ரோல், டீசல் விலையை 2 ரூபாய் 50 காசுகள் வரை மத்திய அரசு அண்மையில் குறைத்தது எனக் குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல மாநில அரசுகளும் விலையை மேலும் 2 ரூபாய் 50 காசுகளை குறைக்க நடவடிக்கை எடுத்தன எனவும் அதே நேரத்தில் டெல்லி உள்ளிட்ட சில மாநில அரசுகள் விலையைக் குறைக்காததற்கான காரணத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :