மத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி

Home

shadow

                                  மத்திய அரசு வசமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக வருமானம் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.


நடப்பு
நிதியாண்டில் மத்திய அரசு வசமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவலில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி மத்திய அரசு  பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அடுத்த ஆண்டு 90 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு விலக்கல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் இடிஎஃப் வெளியீடு மூலம் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதேபோல், ஊரக மின்வசதியாக்கல் நிறுவனம் மற்றும்   மின்சார வசதிக்கான நிதிக் கழகம் ஆகியவற்றின் இணைப்பு மூலம் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது

இது தொடர்பான செய்திகள் :