மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் - ரிசர்வ் வங்கி

Home

shadow

              மத்திய அரசுக்கு இடைக்கால ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழுவின் கூட்டத்தில்,மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

 

 கடந்த ஆண்டு  டிசம்பர் 31-ஆம் தேதி வரையிலான 6 மாதங்களுக்கான ஈவுத்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பொருளாதார தணிக்கை மற்றும் மூலதன கட்டமைப்பு நடைமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுமுன்னதாக, ரிசர்வ் வங்கியின் மத்தியக் குழு கூட்டத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, நாட்டுக்கு பெரும் வங்கிகள்தான் தேவை என்றும், பரோடா வங்கியுடன் தேனா, விஜயா வங்கிகளை இணைப்பது வங்கித் துறையில் நாம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு, மிக அவசியமான நடவடிக்கை என்றார்.

இது தொடர்பான செய்திகள் :