மானியம் அல்லாத சமையல் ஏரிவாயு விலை 133 ரூபாய் விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது

Home

shadow

 

மானியம் அல்லாத சமையல் ஏரிவாயு விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடு, வணிக பயன்பாடு என, இரண்டு விதங்களில், சமையல் ஏரிவாயு, சப்ளை செய்கின்றன. இவற்றின் விலை, சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, மாதந்தோறும் மாற்றப்படுகிறது. அதன்படி கடந்த ஜூன் முதல், மாதந்தோறும், சமையல் ஏரிவாயு விலை உயர்த்தப்பட்டு வந்தது.


இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மானிய சமையல் ஏரிவாயுவின் விலை, 6 ரூபாய் 52 பைசா குறைக்கப்பட்டுள்ளது. மானியம் அல்லாத சமையல் ஏரிவாயுவின் விலை, 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பான செய்திகள் :