முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம்

Home

shadow


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை முறையாக திட்டமிடவில்லை என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ரிசர்வ் வங்கியின் யோசனையை மத்திய அரசு கேட்கவில்லை என்று பரவலான கருத்து நிலவியது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ராகுராம் ராஜன்ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, தன்னை கலந்து ஆலோசிக்கவில்லை என்று தான் ஒருபோதும் கூறவில்லை என்று தெரிவித்தார். மத்திய அரசு தன்னை கலந்து ஆலோசித்ததாகவும், ஆனால் தனது ஆலோசனைகளை அரசு ஏற்கவில்லை என்று தெரிவித்தார்

இது தொடர்பான செய்திகள் :