மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை

Home

shadow

            மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனைப் படைத்துள்ளது.


இன்றைய பங்குச் சந்தை தொடக்கத்தின் போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்தது. இதன் மூலம் சென்செக்ஸ் 39 ஆயிரத்து 20 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது. இதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 90 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 713-ஆக இருந்தது. எம்சாட்உட்பட 29 செயற்கை கோள்களை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில், இந்திய பங்குச் சந்தைகள் இன்றுஏற்றத்தைக்கண்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி சென்செக்ஸ் 38 ஆயிரத்து 985 புள்ளிகளாகவும், நிஃப்டி 11 ஆயிரத்து 704 புள்ளிகளாகவும் வர்த்தகமாகிறது.

இது தொடர்பான செய்திகள் :