ரிசர்வ் வங்கி எஸ்.பி.ஐ-க்கு 40 லட்சம் ரூபாய் அபராதம்

Home

shadow


தனது விதிமுறைகளை பின்பற்றாததால் பாரத ஸ்டேட் வங்கிக்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு  நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. சமீபத்தில் இதன் இரண்டு கிளைகளை ஆய்வு செய்த ரிசர்வ் வங்கி, அங்கு ஆர்.பி.ஐ விதிகள் மீறப்பட்டு இருப்பதை கண்டுப்பிடித்துள்ளது. கள்ள நோட்டுகளை கண்டறிதல் மற்றும் பறிமுதல் செய்வது தொடர்பான விதிமுறைகளை  பாரத ஸ்டேட் வங்கியின் இரண்டு கிளைகளும் பின்பற்றாமல் மீறியுள்ளதாக தெரிகிறது.

விரிவான விசாரணைக்கு பிறகு விதிகளை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கிக்கு 40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. முன்னதாகஇதேபோல் விதிமுறையை மீறிய குற்றத்துக்காக ஆக்சிஸ் வங்கிக்கு 3 கோடி ரூபாயும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 2 கோடி ரூபாயும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :