ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் - அமைச்சர் அருண்ஜேட்லி

Home

shadow

 

 

ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்றும் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசுக்கும், நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு காணப்படுகிறது. சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கவேண்டும் என்றும், தன்னிடம் இருக்கும் நிதியை சற்று குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி வருகிறது.


இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு உதவி செய்யும் விதமாக அமைந்திடவேண்டும் என்றும் மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது எனவும் தெரிவித்தார்.  ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு உதவிடவேண்டும் என குறிப்பிட்ட அவர் அதனால் தன்னிடம் எவ்வளவு நிதி இருப்பை கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவேண்டிய தருணம் இதுவாகும் என கூறினார். ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு ஒரு போதும் அதன் விதிகளை மீறியதில்லை என தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :