ரிசர்வ் வங்கி கவர்னர் - நிலைக்குழு

Home

shadow

  

வங்கி மோசடிகள் தொடர்பான விவரங்களை விவாதிக்க, வரும் மே 17-ம் தேதி நேரில் வருமாறு ரிசர்வ் வங்கி  ஆளுநர் உர்ஜித் படேலுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான  வீரப்பமொய்லி தலைமையிலான நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் குழு உறுப்பினரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது  நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமாரிடம் வங்கித்துறை தொடர்பான பல்வேறு கேள்விகளை நிலைக்குழுவினர் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நிலைக்குழுத் தலைவர் வீரப்ப மொய்லி

அடுத்த மாதம் 17-ம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலை நேரில் வருமாறு நிலைக்குழு அழைப்பு விடுத்துள்ளது என்றார்.  அப்போது வங்கி விதிமுறைகள் மற்றும் ஊழல்கள் தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பப்படும் என்று குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு எத்தகைய அதிகாரம் தேவை என்பது குறித்தும் உர்ஜித் படேலிடம்  கேட்கப்படும் என்றும் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :