ரூபாய் மதிப்பு சரிவு

Home

shadow


              அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து 72 ரூபாய் 44 காசுகளாக உள்ளது.


கடந்த சில நாட்களாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருகிறடு. 
சர்வதேச பொருளாதார நிலைகளில் ஏறப்பட்ட மாற்றம் காரணமாக இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. கடந்த வார முடிவில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71 ரூபாய் 73 காசுகளாக இருந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவை சந்தித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 45 காசுகள் சரிந்து 72 ரூபாய் 44 காசுகளாக உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரிப்பு போன்றவையே இந்திய பண மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தக போரின் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான செய்திகள் :