ரூபாய் மதிப்பு மேலும் சரிந்தது

Home

shadow


      அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து, இதுவரை இல்லாத அளவிற்கு 72 ரூபாய் 91 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.


         சர்வதேச அன்னியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவன முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கு விற்பனை, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்களால் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 72 ரூபாய் 74 காசுகளாக நேற்று சரிந்தது. 


   அதன்பின்னர் சற்று ஏற்றம் பெற்று நேற்றைய வர்த்தக முடிவில் 72 ரூபாய் 69 காசுகளாக நிலவரம் இருந்தது. இந்நிலையில், ரூபாய் மதிப்பு இன்று காலை வர்த்தகத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. 


    காலை 10 மணி நிலவரப்படி ரூபாய் மதிப்பு 22 காசுகள் சரிந்து, 72 ரூபாய் 91 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது.. 

இது தொடர்பான செய்திகள் :