வங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருகிறது - பிரதமர் மோடி

Home

shadow

 

வங்கி கடன்களை தாராளமயமாக்கியதன் மூலம் விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


வெள்ளையர் ஆட்சிக்காலத்தின்போது விவசாயிகளின் உரிமைகளுக்காக போராடிய தீன்பந்து சோட்டு ராம் என்பவரின் 64 அடி உயர சிலையை ஹரியாணா மாநிலம், சம்ப்லா கிராமத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவில் பேசிய  அவர், விவசாயத்துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறினார். வட்டிக்காரர்களின் கோரப்பிடியில் விவசாயிகளும், சிறு வணிகர்களும் சிக்காமல் இருக்க அவர்களுக்கு அரசு வங்கிக் கடன்கள் தாராளமயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். வங்கிகளின் கதவுகள் விவசாயிகளுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹரியாணாவில் மட்டும் ஜன் தன் திட்டத்தின் மூலம் 66 லட்சத்து 50 ஆயிரம் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு தற்போது உரிய விலை கிடைத்து வருவதாக கூறிய பிரதமர் மோடி, பயிர்க் காப்பீடு, நவீன வகை விதைகள், மண் வளத்தை பெருக்க போதுமான உரம் ஆகியவற்றை அரசு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது தொடர்பான செய்திகள் :