வங்கிகளின் அபராத தொகையின் மூலம் 5 ஆயிரம் கோடி வசூல்

Home

shadow


2017-18-ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட அபராத தொகையின் மூலம் வங்கிகள் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்குகளில் குறைந்த பட்ச ஆதார தொகையை கொண்டிராத வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அபராதம் விதித்து வருகின்றன. இந்நிலையில், இது போன்ற அபராத தொகைகள் மூலம் வங்கிகள் மொத்தம் 5 ஆயிரம் கோடி ரூபாயை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா இது தொடர்பான அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார். அறிக்கையில் உள்ள தகவலின் படி பாரத ஸ்டேட் வங்கி 2 ஆயிரத்து 434 கோடி ரூபாயை அபராதமாக வசூல் செய்துள்ளது. மொத்த அபராத தொகையில் இது பாதி அளவாகும். பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து 590 கோடி ரூபாயுடன் எச்.டி.எப்.சி வங்கி இரண்டாம் இடத்திலும், 530 கோடி ரூபாயுடன் ஆக்சிஸ் வங்கி மூன்றாம் இடத்திலும் உள்ளன. அபராத தொகை தொடர்பான விதிமுறையில் பாரத ஸ்டேட் வங்கி மாற்றம் கொண்டு வந்ததை தொடர்ந்து அந்த வங்கியின் அபராத தொகை அளவு கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான செய்திகள் :